செய்யாறில் சிறு பாலம் பணி முழுமை பெறாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செய்யாறு :  செய்யாறில் சிறு பாலம் அமைக்கும் பணி முழுமைபெறாததால் பாலத்தை ஒட்டி சாலையின் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நகராட்சி சார்பில் கோபால் தெரு பைபாஸ் சாலை சந்திப்பில் பல வருட கோரிக்கைக்குபின் சிறுபாலம் அமைக்கப்பட்டது. அந்த சிறுபாலத்தை ஒட்டி சாலையை இணைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முரம்பு மண் கொட்டி ஓரளவிற்கு சீர் செய்தனர். கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால் சிறுபாலத்தை ஒட்டி சாலை பகுதியில் இருந்து மண் அரித்துச்செல்லப்பட்டு அங்குள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

இதனால் அந்த பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுபற்றி கோபால் தெரு மக்களும், கொடநகர் பகுதி மக்களும் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக கோபால் தெரு பைபாஸ் சாலை சந்திப்பில் உள்ள சிறு பாலத்தை ஒட்டி சாலையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதவிட வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>