கொச்சியில் இருந்து லட்சத்தீவுகளை கடல் வழியாக கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் இணைக்கும் டெண்டரை நிறுத்துக'!: விஞ்ஞானி வி.கே.சரஸ்வத்

டெல்லி: கொச்சியில் இருந்து லட்சத்தீவுகளை கடல் வழியாக கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் இணைக்கும் 1072 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிரபல விஞ்ஞானியும், நிதி ஆயோக் உறுப்பினருமான வி.கே.சரஸ்வத் இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். 1072 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஒப்பந்த ஆவணம், இந்திய நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதில் 1,772 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட இருக்கும் மிக முக்கியமான திட்டத்தின் பாதுகாப்பு, செலவு - செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை சமரசம் செய்யக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் TEMA எனப்படும் டெலிகாம் கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்படும் வரை டெண்டரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொலைத்தொடர்புத்துறையில் இந்தியா தனது திறன்களை வளர்க்க முயற்சிக்கும் நேரத்தில், இந்திய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டெண்டருக்கான விதிகள் வடிவமைக்கப்பட்டது போல் உள்ளதாகவும் வி.கே.சரஸ்வத் விமர்சித்திருக்கிறார்.

Related Stories:

>