குளத்தூரில் வாறுகால் கான்கிரீட் மூடி சேதம் -சீரமைக்க கோரிக்கை

குளத்தூர் : குளத்தூர் மெயின் பஜாரில் இருந்து தெற்கு பகுதியில் கருப்பசாமி கோவில் தெரு உள்ளது. இத்தெருவில் கழிவுநீர் வாறுகால் தெருவின் மையத்தில் அமைந்துள்ளது. இதனால் கான்கிரீட் பிளேட் கொண்டு மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாக பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாததால் வாறுகாலில் மூடப்பட்ட 10க்கும் மேற்பட்ட கான்கிரீட் பிளேட்டுகள் சிதிலமடைந்து உடைந்துள்ளதால் வாறுகால் திறந்த நிலையில் காணப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தும் கான்கிரீட் பிளேட்டுகளை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் நடமாடும் குழந்தைகள், பெரியவர்கள் வாறுகாலில் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இத்தெரு பொதுமக்களின் நலன்கருதி சிதிலமடைந்த வாறுகால் பிளேட்டுகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>