தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தேனி , திண்டுக்கல்லில் அதீத கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அலர்ட்!!

சென்னை : தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி ,கோவை, திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.வருகிற 30ம் தேதி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற அக்டோபர் 1ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

இன்று குமரிக்கடல் ,மன்னார் வளைகுடா ,தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதி ,கேரளா , லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: