தென்னிந்திய திருச்சபையின் 75வது ஆண்டு பவள விழா!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடைபெறும் தென்னிந்திய திருச்சபைகளின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு அந்த அமைப்பின் புதிய இலச்சினை வெளியிட்டு பேசி வருகிறார். தென்னிந்திய திருச்சபைகளின் பவள விழா ஆண்டை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதன் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பவள விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. 1974ம் ஆண்டு தொடங்கப்பட்ட திருச்சபை என்பது தென்னிந்தியாவின் 5 மாநிலங்களில் 40 லட்சம் கிறிஸ்துவ பெருமக்களை கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய திருச்சபையாகும்.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருக்கக்கூடிய 24 பேராயர்கள் திருச்சபையின் பவள விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பவள விழா கொண்டாட்டத்தின் புதிய இலச்சினை வெளியிடவுள்ளார். முதலமைச்சருடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து பேராயர்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

Related Stories:

>