ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி!: புதிய பிரதமராகிறார் ஒலாஃப் ஸ்கோல்ஸ்..!!

பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கன்சர்வேடிவ் கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. பன்ஸ்ட்டாக் என்று அழைக்கப்படும்  ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் ஏஞ்சலா மெர்கலின் பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக கூட்டணி கட்சிக்கும், மத்திய இடது சமூக ஜனநாயக கட்சிக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் மொத்தம் உள்ள 730 இடங்களில் பிரதமர் வேட்பாளராக ஒலாஃப் ஸ்கோல்ஸ் என்பவரை முன்னிறுத்திய சமூக ஜனநாயக கட்சி 205 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஏஞ்சலா மெர்கலின் பழமைவாத கூட்டணிக்கு 194 இடங்கள் கிடைத்தன. இந்த வெற்றியை அடுத்து ஜெர்மனியின் அடுத்த பிரதமராக ஸ்கோல்ஸ் விரைவில் பதவியேற்ற இருக்கிறார்.

மெர்கலின் பழமைவாத கூட்டணிக்கு 24.5 விழுக்காடு வாக்குகளும், மத்திய இடது சமூக ஜனநாயக வாதிகள் கட்சிக்கு 26 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் தலைமையின் கீழ் கடந்த 2005 முதல் 16 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த பழமைவாத கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் ஆட்சி தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெர்மனியில் புதிய ஆட்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் அமைச்சரவை குறித்து தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ஒலாஃப் ஸ்கோல்ஸ் ஆலோசனை செய்து வருகிறார்.

Related Stories:

>