சேலத்தில் ரூ.4.50 கோடி மோசடி வழக்கு ஓராண்டுக்கு பின் வாலிபர் கைது

சேலம்:  கோவை பீளமேடு பி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் கவுதம் ரமேஷ் (40). இவர், தனது கூட்டாளிகள் 13 பேருடன் சேர்ந்து தமிழ்நாடு, கேரளாவில் பல்வேறு இடங்களில் 3 நிதி நிறுவனங்களை நடத்தி, முதலீடு செய்வோருக்கு ஓராண்டில் 4 மடங்கு பணத்தை திரும்ப தருவதாக கூறி கோடிக்கணக்கில் முதலீட்டை பெற்றுள்ளனர். கேரளாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்தோரும், கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். இந்நிலையில் முதலீடு பணத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய நிர்வாகிகள், அந்நிறுவனங்களை மூடி விட்டு தப்பினர்.

இதனால், கேரளா, தமிழ்நாட்டில் கவுதம் ரமேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது ரூ.4,700 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.  சேலத்தில் மாதேஷ் என்பவர் தலைமையில் 70 பேர், தங்களிடம் ரூ.4.50 கோடி மோசடி செய்து விட்டதாக கவுதம் ரமேஷ் மீது புகார் கொடுத்தனர். இதுபற்றி சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த ஆண்டு செப்டம்பரில் வழக்குப்பதிவு செய்து கவுதம் ரமேசை கைது செய்தனர். இந்நிலையில் கவுதம் ரமேசின் கூட்டாளிகளை சேலம் போலீசார் நேற்று, கோவை இருகூர் இபி காலனி மதுரைவீரன் கோயில்தெருவை சேர்ந்த காளிமுத்து மகன் கனகராஜ் (25)யை  ஓராண்டுக்கு பின் கைது செய்தனர்.

Related Stories: