ஒன்றரை ஆண்டாகியும் அனுமதிக்க மறுப்பு சீனாவில் இருந்து திரும்பிய 23,000 இந்தியர்கள் தவிப்பு: ஒன்றிய அரசு அதிருப்தி

பீஜிங்: கொரோனா பீதியால் சீனாவில் இருந்து திரும்பி வந்த இந்தியர்களை மீண்டும் அனுமதிக்காமல் அலை கழிப்பதற்காக அந்த நாட்டுக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் வுகான் நகரத்தில் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகள் முழுவதும் பரவியதால், அனைத்து நாட்டுக்கிடையே விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சீனாவும் விமானச் சேவையை ரத்து செய்தததுடன், விசா வழங்குவதையும் நிறுத்தியது.  இதனால், சீனாவில் படித்து வந்த மாணவர்கள், ஊழியர்கள், வணிகர்கள் உள்பட 23 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு குடும்பத்துடன் திரும்பினர்.

கடந்த 24ம் தேதி சீனா-இந்தியா உறவின் 4வது உயர்மட்ட குழு நடத்திய பேச்சுவார்த்தையின்போது பேசிய சீனாவுக்கான இந்திய தூதர் மிஸ்ரி, ‘இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளாக தங்கியுள்ள இந்தியர்களை மனிதாபிமான முறையில் சீன திரும்ப அழைக்க வேண்டும். விசா வழங்காமல் காலம் கடத்துவது விஞ்ஞானப்பூர்வ அணுகுமுறையாக இல்லை,’ என்றார். இதற்கு சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், ‘இந்தியர்களை இப்போது அனுமதிக்க முடியாது என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது.

Related Stories: