தொடர்ந்து சிறப்பாக செயல்படும் கருவிகள் மங்கள்யான் திட்டம் முழு வெற்றி: இஸ்ரோ முன்னாள் தலைவர் மகிழ்ச்சி

பெங்களூரு: மங்கள்யான் திட்டத்தின் இயக்குனராக செயல்பட்டவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை நேற்று கூறியதாவது: மங்கள்யான் 15 கிலோ எடையுள்ள ஆய்வு கருவிகளுடன் பயணம் மேற்கொண்டது. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக அது விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, மங்கள்யானில் இருந்த கருவிகள் 6 மாதங்கள் மட்டுமே செயல்படும் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த கருவிகள் தற்போது 7 ஆண்டுகளை கடந்து விட்ட போதிலும் சிறப்பாக இயங்கி வருகின்றன. இன்னும் ஓராண்டுக்கு அவை சிறப்பாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

சந்திராயன்-1 திட்டத்தில் நாங்கள் சில  பாடங்கள் கற்றோம். எரிபொருள் பயன்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், மங்கள்யான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. அதேபோல், புவியை ஆராயும் செயற்கைக்கோளின் வாழ்நாள் மேலும் 2 ஆண்டுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மங்கள்யான் விண்கலத்தில் உள்ள ஆய்வு கருவிகளை வடிவமைப்பு செய்வதற்கு 18 -19 மாத அவகாசம் மட்டுமே விஞ்ஞானிகளுக்கு கிடைத்தது. செவ்வாய்க்கோளின் மேற்பரப்பில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களை அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு முக்கிய தகவல்கள் நமக்கு கிடைத்து வருகின்றன. மங்கள்யான் திட்டம் உண்மையில் முழு வெற்றி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: