14 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ச்சி தால் ஏரியின் மீது விண்ணில் சாகசம் புரிந்த விமானப்படை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை அதிகமாக கவரும் இடங்களில் ஒன்றாக தால் ஏரி உள்ளது. இதன் அருகே நேற்று விண்ணை பிளக்கும் வகையில், இந்திய விமானப்படையின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சூரியகிரண் குழுவை சேர்ந்த விமானங்கள் விதவிதமான சாகங்களை செய்து, மக்களை மெய்சிலிர்க்க வைத்தன. மிக்-21 பைசன், சுகோய்-30 ரக போர் விமானங்கள், பாரசூட் பிரிவு வீரர்கள் விண்ணில் பறந்து சாகங்களை நிகழ்த்தி, மக்களின் கைத்தட்டல்களை பெற்றன. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் ஓராண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டும், காஷ்மீர் இளைஞர்களை விமானப்படையில் சேர்க்க ஊக்கமளிப்பதற்காகவும் இந்த சாகச நிகழ்ச்சிகள், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று இங்கு நடத்தப்பட்டது. இதை ஆயிரக்கணக்கான மக்கள், பள்ளி மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.

Related Stories: