பாஜ தலைவர் குடும்பத்தை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பந்திபோராவில் உள்ள வாட்ரினா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையுடன் இணைந்து கூட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில், 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாதிகள் ஆசாத் அகமது ஷா, அபிப் ரஷித் தார் என்று தெரியவந்துள்ளது என்றனர். இந்த 2 தீவிரவாதிகளும் வெளிநாட்டு பயங்கரவாதிகளாக உஸ்மான், சஜாத் ஆகியோருடன் இணைந்து கடந்தாண்டு பாஜ மாவட்ட தலைவர் வாஷீம் பாரி, அவரது சகோதரர் மற்றும் தந்தையை சுட்டுக் கொன்றனர். இவர்கள் கொல்லப்பட்டதை பாஜ.வினர் கொண்டாடினர்.

Related Stories:

>