புதுப்பட்டினத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் உள்ளாட்சி மன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று  புதுப்பட்டினத்தில் நடந்தது.  இதில், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஆர்.டி.அரசு மற்றும் திமுக நிர்வாகிகள் கயல் மாரிமுத்து, தாமோதரன், நாகமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான திமுக அலுவலகத்தை திறந்து வைத்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். இதில், ஒன்றியத்திற்குட்பட்ட  கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

Related Stories:

>