நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நாளை தாக்கல்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி: தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி குறித்து உச்சநீதிமன்றத்தில் நாளை அபிடவிட் தாக்கல் செய்யப்பட உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொரோனா தடுப்பூசி மெகா முகாம்களுக்கு மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய சொல்லி தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 24ம்தேதி நடக்க வேண்டிய இந்த வழக்கு 28ம் தேதி (நாளை) நடக்கிறது. அப்போது தமிழக அரசின் சார்பில் தீர ஆராய்ந்து எந்தெந்த தேதியில் தேர்தல் நடத்துவோம் என்பது குறித்து அபிடவிட் தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>