பள்ளி மாணவர்கள் மூலமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பெற்றோர் விவரம் சேகரிப்பு: விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை

சேலம்: தமிழகத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த, சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,” அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி, அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில், தடுப்பூசி செலுத்தாதவர்களிடம் மாணவர்கள் மூலமாகவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அனைத்து மாணவர்களும், தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் விவரங்களை, அந்தந்த பள்ளி ஆசிரியர்களிடம் அளிக்க வேண்டும். இதில், குடும்ப உறுப்பினர்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் யார், முதல் தவணை தடுப்பூசி எப்போது போட்டுக்கொண்டனர், இரண்டாம் தவணையை உரிய தேதியில் போட்டுக்ெகாண்டார்களா என்ற விவரம் அளிக்க வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் விவரமும், அதற்கான காரணத்தையும் தெரியப்படுத்த வேண்டும். அனைத்து தகுதியிருந்தும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால்,  உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

Related Stories:

>