டீசல் விலை 23 காசு உயர்வு

சேலம்: நாடு முழுவதும் நேற்று டீசல் விலை 23 காசுகள் அதிகரித்தது. பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைக்கிறது. இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் டீசல் விலை 20 காசு முதல் 25 காசுகள் வரை அதிகரிக்கப்பட்டது. பெட்ரோல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், சென்னையில் நேற்று முன்தினம் டீசல் ரூ.93.46க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 23 காசு உயர்ந்து ரூ.93.69க்கு விற்கப்பட்டது. பெட்ரோல் விலை மாற்றமின்றி ரூ.98.96க்கு விற்கப்பட்டது. சேலத்தில் டீசல் விலை ரூ.93.80ல் இருந்து 24 காசுகள் அதிகரித்து ரூ.94.04க்கு விற்றது. பெட்ரோல் ரூ.99.28க்கு விற்கப்பட்டது.

Related Stories:

>