குடியாத்தம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கணவனை எதிர்த்து மனைவி போட்டி

குடியாத்தம்: குடியாத்தத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாமக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவி சுயேச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம்  ஒன்றியத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 7 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் திமுக சார்பில் கல்லூர் ரவி, அதிமுக சார்பில் முருகன், பாமக சார்பில் சுரேஷ்குமார் போட்டியிடுகின்றனர். இதில், பாமக வேட்பாளர் சுரேஷ்குமாரின் மனைவி தமிழரசியும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அவருக்கு கைத்தடி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. பாமக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவி வேட்பு மனுதாக்கல் செய்துள்ளது அக்கட்சியினரிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>