பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பார்சல் சர்வீஸ் லாரியில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை: பெங்களூருவில் இருந்து பார்சல் சர்வீஸ் லாரி மூலம் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்றவை கொண்டு வரப்படுவதாக தகவலறிந்து, திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது, திருவண்ணாமலை மண்டி தெருவில் உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் நிலையத்துக்கு லாரியில் கொண்டு வந்து இறக்கப்பட்ட பண்டல்களை சோதித்தனர். அதில், காட்டன் மற்றும் பாலியஸ்டர் நூல் என குறிப்பிடப்பட்டு உள்ளே பான்மசாலா, குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம். அந்த பண்டல்கள் யாருக்கு செல்கிறது என்ற முகவரியும் இல்லை. பெங்களூரில் இருந்து பார்சல் அனுப்பும் நபர்கள், திருவண்ணாமமலையில் அதை பெறுபவரின் செல்போன் எண்ணை மட்டும் பார்சல் நிறுவனத்திடம் அளிப்பதாகவும், அதன்படி பார்சல்கள் சேர்வதும் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

Related Stories:

>