இன்று முதல் நேரடியாக பறக்கலாம் இந்திய விமானங்களுக்கு கனடா அரசு அனுமதி

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து வரும் நேரடி பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு இன்று முதல் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரலில் கொரோனா 2வது அலையின்  தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதனால், இந்தியாவில் இருந்து இயக்கப்பட்டு வந்த நேரடி பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்தது. இதை மீண்டும் அனுமதிப்பது பற்றி பலமுறை ஆலோசித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டிருடேவ். அந்த முடிவுகளை ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து இன்று முதல் நேரடி பயணிகள் விமானங்களை இயக்க, கனடா அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும், டெல்லி விமான நிலையத்தில் 18 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றுகளை சமர்ப்பிக்கும்படி நிபந்தனை விதித்துள்ளது. கனடாவின் இந்த முடிவை ஒன்றிய அரசு வரவேற்றுள்ளது. இதேபோல், கனடா நாட்டு விமானங்களும் இந்தியாவுக்கு நேரடியாக வரும்.

Related Stories: