ஆட்டோ விபத்தில் செயலிழப்பு கேரள பெண்ணுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: மோட்டார் வாகன தீர்ப்பாயம் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள வஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் சிந்து (41). 2 குழந்தைகள் உள்ளனர். கணவரை பிரிந்து வாழ்ந்து  வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றார். அப்போது, ஆட்டோ திடீரென கவிழ்ந்தது. இதில் சிந்துவுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த  காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் பல நாட்கள் சிகிச்சை பெற்று திரும்பினார். பல மாதங்களாகியும் பாதிப்பு குறையவில்லை. தற்போது, உடல் உறுப்புகள் செயலிழந்து படுத்த படுக்கையாக உள்ளார். இந்நிலையில், தனக்கு நஷ்டஈடு வழங்க கோரி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி சேஷாத்திரி நாதர், சிந்துவுக்கு நஷ்டஈடாக  ரூ.73 லட்சத்து 46 ஆயிரத்து 558 நஷ்டஈடும், அதற்கான வட்டியா ரூ.23 லட்சத்து 18 ஆயிரத்து 880ம், நீதிமன்ற செலவுக்காக  ரூ.7 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடியே 3 லட்சத்து 65 ஆயிரத்து 438ஐ வழங்கும்படி இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

Related Stories:

>