பாஜ.வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு புதிய தலைவர், உறுப்பினர்கள்: மாநில கட்சிகளுக்கும் வாய்ப்பு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசின் துறைகளுக்காக தனித்தனியாக நிலைக்குழுக்கள் உள்ளன. தற்போது, 24 நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் செயல்படுகின்றன. இதில், 16 குழுக்களுக்கு மக்களவையை சேர்ந்தவர்களும், 8 குழுக்களுக்கு மாநிலங்களவையை சேர்ந்தவர்களும் தலைவர்களாக நியமிக்கப்படுவார்கள். தற்போதுள்ள நிலைக்குழுக்களின் பதவிக்காலம் முடிவதால், புதிய நிலைக்குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளன.

நிலைக்குழுவின் தலைவர்கள், கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். தலைவர்களை தேர்வு செய்யும் அதிகாரம் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும், மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பரிந்துரை செய்யும் எம்பி.க்களே,  நிலைக்குழுவின் தலைவர், உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த முறை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதிக எம்பி.க்களை கொண்டுள்ள பாஜ.வுக்கு அதிக பதவிகள் கிடைக்க உள்ளது.சில மாநில கட்சிகளுக்கும் தலைவர் பதவி கிடைக்கக் கூடும்.

Related Stories: