சொல்லிட்டாங்க...

* கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு இந்தியனின் பங்களிப்பும் அவசியம். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருமே இந்த பாதுகாப்பு வளையத்தில் விடுபடாமல் இருப்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். - பிரதமர் மோடி.

* இத்தாலியில் நடைபெறும் உலக அமைதி மாநாட்டில், என் மீதுள்ள பொறாமை காரணமாக பா.ஜ அரசு எனக்கு அனுமதி அளிக்கவில்லை. இது வெளி உலகத்தில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்துள்ளது. - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

* ஆன்லைன் வீடியோ கேம் காரணமாக தற்கொலை அதிகரித்து வருகிறது, மாணவர்கள் சரிவர படிப்பதில்லை. இதற்கு அடிமையானவர்களை மீட்டு சமூகத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு வர டிஜிட்டல் டி-அடிக்சன் மையங்கள் தொடங்கப்படும். - கேரள முதல்வர் பினராய் விஜயன்.

* மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதாவினரே தங்கள் நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கை வழங்கிக் கொண்டிருக்கும்போது, சினிமா தியேட்டர்களை திறக்க வேண்டியது அவசியம் இல்லை. - சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத்

Related Stories:

>