மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

ஆவடி: ஆவடி அடுத்த கோவில்பதாகை மெயின் ரோட்டில் ஒரு புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு மேற்கு வங்கத்தை சேர்ந்த இப்ராஹீம்(25) என்ற கட்டிட தொழிலாளி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை இப்ராஹீம் முதல் மாடியில் கட்டிட பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவர் இரும்பு கம்பியை எடுத்துச் செல்லும்போது வீட்டின் ஓரமாக சென்ற மின்சார வயரில் உரசி உள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து இப்ராஹீம், தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து சக ஊழியர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இப்ராஹீம் இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்பேரில், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>