இளம்பெண் தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே உள்ள நரசமங்கலம் காலனியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகள் ஜெயஸ்ரீ(21). இவர் பிபிஏ முடித்துவிட்டு சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில், காணாமல்போன ஜெயஸ்ரீ நேற்று முன்தினம் நரசமங்கலம் பகுதியிலுள்ள ஏரிக்கரையில் உள்ள முட்புதரில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories:

>