மினி லாரியில் குட்கா கடத்தல்

பொன்னேரி: மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்துவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், பொன்னேரி டிஎஸ்பி குணசேகரன் மேற்பார்வையில் மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் எஸ்ஐக்கள் வேலுமணி, சந்திரசேகர் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் மீஞ்சூர் - நெமிலிச்சேரி சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையில் இருந்து மீஞ்சூர் வந்த மினி லாரியில் 54 பெட்டிகளில் 700 கிலோ அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். மினி லாரியை ஓட்டி வந்த சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த செய்யது(48), வெங்கட்ரெட்டி(45) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>