பூண்டி ஒன்றிய திமுக கவுன்சிலர் வேட்பாளர் அறிமுகம் கூட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலராக இருந்த திமுகவை சேர்ந்த குமார் கொரோனா காரணமாக கடந்த வருடம் இறந்துவிட்டார். இதன் காரணமாக இந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக வேட்பாளராக காண்டீபன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பூண்டி ஒன்றிய 3வது வார்டு வேட்பாளர் காண்டீபன் அறிமுக கூட்டம் போந்தவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இதில், பூண்டி கிழக்கு  ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் பகலவன், மாவட்ட பொதுகுழு உறுப்பினர் கதிரவன், ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, பேரூர் செயலாளர் அப்துல் ரஷீத், பூண்டி ஒன்றிய குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால், வக்கில்கள் வெஸ்லி, அன்புவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூண்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தில்லை குமார் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டார்.

Related Stories:

>