மேலும் 219 ரவுடிகள் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய 5 உட்கோட்ட துணை போலீஸ் டிஎஸ்பிக்கள் தலைமையில் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கடந்த மூன்று நாட்களாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 219 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் நேற்று முன்தினம் மட்டும் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>