இலவச மருத்துவ முகாம்

திருத்தணி: திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள தளபதி கே.விநாயகம் பள்ளியில், சென்னை ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை எஸ்.சந்திரன் எம்எல்ஏ, பள்ளி தாளாளர் பாலாஜி ஆகியோர் துவக்கிவைத்தனர். முகாமில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதயநோய், நீரிழிவு, பொது மருத்துவம் போன்ற நோய்களுக்கு, இருதய சிறப்பு மருத்துவர் சிவன் தலைமையில், 7 மருத்துவர்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>