தமிழகத்தில் மேலும் 1,694 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,694 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,55,245 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,694 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,57,266 ஆக உள்ளது. இதேபோல், நேற்று சிகிச்சை பெற்று வந்த 1,658 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

 அதன்படி, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,04,491 ஆக உள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 14 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், அதிகபட்சமாக சென்னையில் நேற்று 190 பேர்,  கோவையில் 196 பேர், செங்கல்பட்டில் 118 பேர், ஈரோட்டில் 118 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>