30 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் துப்பாக்கி முனையில் கைது

பெரம்பூர்: தமிழகம் முழுவதும் ரவுடிகள் பட்டியலை தயார் செய்து, அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2 நாட்களில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புளியந்தோப்பு நரசிம்மன் நகர் 3வது தெருவை சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை (42) கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இவர் மீது 5 கொலை வழக்கு, ஆள் கடத்தல், கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், ஆற்காடு சுரேஷ் தனது கூட்டாளிகளை சந்திக்க புளியந்தோப்பு ஆடுதொட்டிக்கு வருவதாக நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் வேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை ரகசியமாக கண்காணித்த போலீசார், அங்கு வந்த ஆற்காடு சுரேஷை சுற்றிவளைத்து, துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories:

>