துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.65.5 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை:  துபாயிலிருந்து பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதிலிருந்து பயணிகள் வெளியேறிய பிறகு,  விமான நிலைய பெண் லோடர்கள் அந்த விமானத்தை  சுத்தம் செய்தனர். அப்போது, ஒரு சீட்டிற்கு அடியில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது. இதுபற்றி விமான நிலைய மேலாளருக்கு தகவல்  தெரிவித்தனர். அதன்பேரில், பாதுகாப்பு  அதிகாரிகள் அங்கு வந்து, அந்த கைப்பையை பார்த்தனர்.  அதில், 519 கிராம் தங்கக்கட்டிகள், மற்றும் 2 செல்போன்கள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.25.5 லட்சம். இதையடுத்து, சென்னை விமான நிலைய மேலாளர் அந்த தங்கக் கட்டிகளையும், செல்போன்களையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

அதை தொடர்ந்து, நேற்று அதிகாலை துபாயிலிருந்து பிளை துபாய் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த ஆண் பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார். சுங்கத்துறையினர் சந்தேகத்தில் அந்த பயணியை மீண்டும் உள்ளே வரவழைத்து அவரை சோதனை செய்தனர். அப்போது, அவருடைய உள்ளாடைக்குள், பசை வடிவிலான 864 கிராம் தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.40 லட்சம். அதை பறிமுதல் செய்து, பயணியை கைது செய்தனர்.

Related Stories: