பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்ற தலைப்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை: ‘பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை’ என்ற தலைப்பில், சென்னை மாநகர மகளிர் போலீசார் உட்பட பெண்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை, மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷாமிட்டல் மற்றும் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) சினேகா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே தொடங்கி வைத்தனர். இந்த பேரணி மெரினா காந்தி சிலையில் தொடங்கி பேர் நினைவு சின்னம், சென்ட்ரல் ரயில் நிலையம், அமைந்தகரை ஸ்கைவாக், நுங்கம்பாக்கம், ஜெமினி மேம்பலம், ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மீண்டு காந்தி சிலையில் வந்து முடிந்தது. இதில், பெண் காவலர்கள் உட்பட 150 பெண்கள் கலந்து கொண்டனர்.

அதைதொடர்ந்து நேற்று காலை மீண்டும் சென்னை மெரினா காந்தி சிலை, அண்ணாநகர் 6வது அவென்யூ, அண்ணாசாலை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம், ராதாகிருஷ்ணன் சாலை டிஜிபி அலுவலகம், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை, பெசன்ட் நகர், ரிப்பன் மாளிகை, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஐசிஎப் நியூ அவடி சாலை உள்ளிட்ட 10 இடங்களில் ‘கார் ப்ரீ டே’ என்ற தலைப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி தம்மை பாதுகாத்து கொள்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மேற்கண்ட 10 இடங்களில் நடந்த  சைக்கிள் பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் கலந்து கொண்டனர்.

Related Stories:

>