உள்ளாட்சி தேர்தலுக்கு அன்புமணி 3 நாட்கள் பிரசாரம்: 30ம் தேதி தொடங்குகிறார்

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பாமக வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பாமக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான அன்புமணி வரும் 30ம் தேதி முதல் மொத்தம் மூன்று நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்கள். 30ம் தேதி(வியாழக்கிழமை) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், 1ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், 2ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

Related Stories:

>