சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் கூலிங் கிளாஸுடன் பைக்கில் உலா வரும் ஊனமுற்ற நாய்

சென்னை: பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் என்ற வாலிபர் ஜோனர் என்ற நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்த ஊனமுற்று இருப்பதால் மற்ற நாய்களை போல வெளியே சென்று விளையாட முடியவில்லை. ஆனால் மோட்டார் சைக்கிளில் ரைடு செல்வது இந்த நாய்க்கு மிகவும் பிடிக்குமாம். இதையடுத்து அந்த நாய்க்கு கூலிங் கிளாஸ், கழுத்தில் செயின் மறறும் உடை அணிவித்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்து ஒரு ரவுண்டு அடித்து விட்டு வருவாரம் அந்த வாலிபர். தினமும் பூந்தமல்லியில் இருந்து வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் குழந்தையை அமர வைத்து கொண்டு செல்வது போல் அழைத்து சென்று வருகிறார்.

இந்த காட்சிகளை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது . பைக்கில் அமர்ந்தபடி சாலையின் இரண்டு புறங்களிலும் ரசித்தபடி அந்த நாய் செல்லும் காட்சி காண்போரை ரசிக்க வைத்துள்ளது. மேலும் சாதாரணமாக மற்ற நாய்கள் போல் ஓடி, ஆடி விளைாட முடியாமல் இருக்கும் இந்த நாய்க்கு இது போல் பைக்கில் அழைத்து செல்வது தனக்கும், தனது செல்லமாக வளர்க்கும் நாய்க்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தவதாக உரிமையாளர் பிரமோத் தெரிவித்துள்ளார்.

Related Stories: