முதல்வருடன் மாற்று திறனாளிகள் நேரில் சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை மாற்றுத் திறனாளிகள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். பல்வேறு திட்டங்களை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் தலைமையில் 25க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள், தங்களுக்கு பல்வேறு சலுகைகள், திட்டங்களை அளித்ததற்காக நேரில் சந்தித்து நன்றி செலுத்தினர். சந்திப்புக்கு பின்னர் தங்கம் அளித்த பேட்டி:

தமிழக அரசு மாற்று திறனாளிகள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. இதே போல, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோயிலில் நடைபெறும் திருமணத்துக்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகளுக்கு ேவலை வாய்ப்பு அளிக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தனி சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும்,  அறிவிப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்காக அவரை நேரில் சந்தித்து மாற்றுத் திறனாளிகள் சார்பில் நன்றி தெரிவித்தோம்.இவ்வாறு அவர் கூறினாார்.

Related Stories:

>