போடி மெட்டில் 800 கிலோ ஏலக்காய் பறிமுதல்: ஒருவர் அதிரடி கைது

போடி: கேரளாவில் இருந்து போடிக்கு கடத்தி வரப்பட்ட 800 கிலோ ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கேரளாவில் இருந்து தேனி மாவட்டம் போடிக்கு வேன்களில் ஏலக்காய் கடத்தி வருவதாக போடி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போடி மெட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போடிமெட்டு மலைச்சாலையில் எஸ் வளைவில் வந்த 2 வேன்களை வழிமறித்து சோதனையிட்ட 800 கிலோ ஏலக்காய் மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், போடி மெட்டை சேர்ந்த மகேஷ் (37) என்பதும், முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் கேரளாவில் இருந்து போடிக்கு ஏலக்காய் மூட்டைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 800 கிலோ ஏலக்காய்களை இரண்டு வேன்களோடு போலீசார் பறிமுதல் செய்தனர். மகேஷை கைது செய்து அவருக்கு ரூ.83 ஆயிரம் அபராதம் விதித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் போடி வணிக வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>