சைபர் கிரைம் எழுத்துத்தேர்வு: திருப்பூரில் 135 போலீசார் எழுதினர்

திருப்பூர்: செல்போன் மற்றும் இணையதள சேவையை தவறாக பயன்படுத்துவோர் மீது புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில்  தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் பணியாற்றுவதற்காக தகுதி வாய்ந்த போலீசார்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டத்திலும் சைபர் கிரைம் பிரிவில், பணியாற்ற பலர் விருப்ப மனு அளித்தனர். அதன்படி இதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 229 பேர் இத்தேர்வை எழுதினார்கள்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் 135 போலீசார் பங்கேற்று தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வு எழுத சென்ற போலீசாருக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதேபோல் உடல் வெப்ப பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இத்தேர்வையொட்டி பள்ளி வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: