வடிகால் கட்டுவதால் போக்குவரத்து பாதிப்பு: 24 மணி நேரத்தில் மாற்றுப்பாதை அமைத்து பேருந்துகள் இயக்கம்

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் தினகரனில் செய்தி வந்ததன் எதிரொலியாக 24 மணி நேரத்தில் மாற்றுபாதை அமைத்து பேரூந்துகள் இயக்கபட்டதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். தில்லையாடி வள்ளியம்மை நகர் அருகே பொறையார் செல்லும் சாலையில் மழைநீர் வடிகாலை அகலப்படுத்தி புதிதாக கட்டப்படுவதால், பொறையாரில் இருந்து தில்லையாடி வழியாக மயிலாடுதுறை, சிதம்பரம், நாகப்பட்டிணம் செல்லும் பேரூந்துகள் ஒரு வாரமாக நிறுத்தபட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனால் மாற்றுப்பாதை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி, தினகரனில் நேற்று முன்தினம் வெளிவந்தது. இந்த செய்தி வந்த 24 மணி நேரத்தில் வடிகால் அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே புதிய சாலை அமைத்து பேருந்து போக்குவரத்துக்கு இடையூராக இருந்த மின் கம்பங்களை மாற்றி புதிதாக மின் கம்பம் அமைத்தும் நேற்று காலை முதல் பேரூந்துகள் அந்த பாதையில் இயக்கப்பட்டன. இதனால் தில்லையாடி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தக்க நேரத்தில் செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

>