தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது: மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று 3-ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 20,000 சிறப்பு முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் 1600 தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த மருத்துவத்துறை செயலர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தேவையான அளவு கையிருப்பில் உள்ளதால் மெகா தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது 5.42 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் இன்று 23,436 மெகா தடுப்பூசி சிறப்பு மையங்கள் செயல்படுகின்றன. அரியலூர், கடலூரின் சில இடங்களில் கொரோனா cluster கண்டறியப்பட்டுள்ளது. 86 லட்சம் முதியவர்களின் 46 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

சென்னையில் வீடு தேடி முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை போட்டுக்கொண்டவர்கள் கண்டிப்பாக இரண்டாவது தவணை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பூஸ்டர் டோஸ் போட வேண்டுமா என்பது குறித்து மருத்துவ ரீதியான மருத்துவர் குழுவே முடிவு செய்யும் என கூறினார்.

Related Stories:

>