தமிழ்நாடு முழுவதும் 3ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது; 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு..!

சென்னை: தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மாபெரும் கொரோனா-19 தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19ம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக கொரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் சுமார் 20,000 சிறப்பு முகாம்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் 1600 தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவை ஒழிக்கும் வகையில் தங்கள் பங்கை செலுத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: