வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை

ஆவடி: ஆவடி அடுத்த கோணம்பேடு நேரு தெருவை சேர்ந்தவர் நாராயணன்(42). இவர், அயப்பாக்கத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. தனியார் நிறுவனத்தில் ஊழியர். இவர்களுக்கு பரத்ராஜ்(12), கேசவன் (10) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை நாராயணன் டெய்லர் கடைக்கும், தமிழ்ச்செல்வி வேலைக்கும் சென்று விட்டனர். பின்னர் மதியம் நாராயணன் வீட்டுக்கு ஒரு வாலிபர் வந்துள்ளார். பின்னர், அவர் இரு மகன்களிடம், `உனது தந்தை எனக்கு பணம் தரவேண்டும்.

மேலும், வீட்டில் பணம் உள்ளது. மகன்களிடம் வாங்கிச் செல்லும்படி தந்தை  கூறியுள்ளார்,’ என கூறினார். பின்னர் சிறுவர்களை மர்ம நபர் ஏமாற்றி கண் இமைக்கும் நேரத்திற்குள் வீட்டுக்குள் வந்து பீரோவைத் திறந்து, அதிலிருந்த நகைகள், பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். தகவலறிந்த நாராயணன் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அதன்பிறகு, அவர் பீரோவை சோதனை செய்ததில் 6 சவரன் நகை, ₹10 ஆயிரம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. மேலும், புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>