குட்கா விற்பனை கடைக்காரர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைபொருள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை பாதிரிவேடு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஜார் பகுதியில்  மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைபொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து தகவலறிந்ததும் குறிப்பிட்ட மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில், கடைக்குள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த ₹14 ஆயிரம் மதிப்புள்ள குட்கா போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மளிகைக்கடை உரிமையாளர் முத்து (43) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>