ஊராட்சி தலைவராக லட்சுமி பங்காரு அடிகளார் போட்டியின்றி தேர்வு

சென்னை: மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லட்சுமி பங்காரு  அடிகளார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சித்தாமூர் ஒன்றியம் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்  பதவிக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பரணியிடம் கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தலில், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் லட்சுமி பங்காரு அடிகளார் நேற்று, போட்டியின்றி மேல்மருவத்தூர் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories:

>