1ம் வகுப்பு சிறுமியை பஸ்சில் சீரழித்த ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்:  ேகரள மாநிலம்,  மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரபீக் (44).   திருச்சூர் அருகே பாவரட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நன்மார்க்க  ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2012ம் ஆண்டு, இவர்  ஒன்றாம் வகுப்பு மாணவிகளை சுற்றுலா மையங்களுக்கு பேருந்தில் அழைத்து சென்றார். அப்போது, பஸ்சில் 2ம் வகுப்பு மாணவியை  பலாத்காரம் செய்தார். வீட்டிற்கு திரும்பிய சிறுமிக்கு உடல்நலன் பாதித்ததால், பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தனர். அதில், பிறப்புறுப்பில் காயங்கள் இருந்தது. தொடர் பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்தது.

இது குறித்து  பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார், ஆசிரியர் அப்துல்  ரபீக் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த குன்னங்குளம் அதிவேக சிறப்பு போக்சோ  நீதிமன்றத்தின் நீதிபதி ஷிபு நேற்று  தீர்ப்பளித்தார். அதில், அப்துல் ரபீக்குக்கு 29.5 ஆண்டுகள் சிறை  தண்டனையும், ₹2.15 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட  தவறினால் கூடுதலாக 2.9 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>