கிராம பெண்களின் சேலை துவைக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு தடை

பாட்னா: பீகார் மாநிலம், மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி லாலன் குமார் சபி. பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இவர் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்த  ஜஞ்சார்பூர் துணை மண்டலத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி அவினாஷ் குமார், ‘லாலன் தான் வசிக்கும் கிராமத்தில் உள்ள பெண்களின் சேலைகளை ஆறு மாதத்துக்கு இலவசமாக துவைத்து, அயர்ன் செய்து கொடுக்க வேண்டும்,’ என்று நூதன தீர்ப்பு அளித்தார்.

வித்தியாசமான இந்த தீர்ப்பை பெரும்பாலோர் வரவேற்றனர். அதே நேரம், இதற்கு எதிராக கடும் விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், இது தொடர்பாக பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிர்வாக உத்தரவில், ‘மறு உத்தரவு வரும் வரை நீதிபதி அவினாஷ் குமார் நீதிமன்ற  பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது,’ என்று கூறியுள்ளது.

Related Stories:

>