பஞ்சாப் கிங்ஸ் திரில் வெற்றி

ஷார்ஜா: ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீசியது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல், அகர்வால் களமிறங்கினர். ராகுல் 21 ரன், அகர்வால் 5 ரன் எடுத்து ஹோல்டர் வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து வெளியேறினர். அதிரடி வீரர்கள் கிறிஸ் கேல் 14, நிகோலஸ் பூரன் 8 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஓரளவு தாக்குப்பிடித்த மார்க்ரம் 27 ரன் எடுத்து அப்துல் சமத் பந்துவீச்சில் மணிஷ் வசம் பிடிபட்டார்.

தீபக் ஹூடா 13, நாதன் எல்லிஸ் 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. ஹர்பிரீத் பிரார் 18 ரன், ஷமி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் ஹோல்டர் 4 ஓவரில் 19 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார். சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷித் கான், அப்துல் சமத் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் களமிறங்கியது.

இதில் ஐதராபாத் வீரர் சாகா (31 ரன்) மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். எனினும் பின்னால் வந்த ஹோல்டர் 47 ரன் (29 பந்து) எடுத்தார். எனினும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் ரன் எடுக்க முடியாமல் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 120 ரன் எடுத்து தோல்வி அடைந்தனர்.

Related Stories:

>