பெண் போலீசை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பல்

நீமுச்: மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், அதற்கு முன்பாக நீமுச் மாவட்டத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், பெண் காவலரை தனது தம்பியின் பிறந்த நாளுக்கு வரும்படி இளைஞர் அழைப்பு விடுத்தார். பெண் காவலர் அங்கு சென்ற போது, இளைஞரும், அவருடைய தம்பியும், மற்றொரு நண்பரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

மேலும், அதை வீடியோவும் எடுத்தனர். அந்த இளைஞரின் தாயாரும், அவருடைய உறவினர் ஒருவரும் அந்த வீடியோவை வெளியிடப் போவதாக மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனால்,அந்த பெண் போலீஸ் கடந்த 13ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான இளைஞரையும் அவரது தாயாரையும் கைது செய்துள்ளனர்.

Related Stories:

>