க்ரைம் நியூஸ்

கார், 4 பைக்குகள் எரிந்து நாசம்:நெற்குன்றம் சண்முக நாதர் சத்தியம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஐடி நிறுவன ஊழியர் ஹரீஷ் (26), தனது கார் மற்றும் 3 பைக்குகளை தரை தளத்தில் நிறுத்தி இருந்தார். இதன் அருகில் மற்றொரு பைக்கும் நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை இந்த 5 வாகனங்களும்  திடீரென தீப்பிடித்து நாசமானது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

5 சவரன், 8 கிலோ வெள்ளி கொள்ளை: திருமங்கலம் தங்கம் காலனியில் தனியாக வசித்து வரும் பிரதீப்குமார் என்பவரின் பெற்றோர், கடந்த 2 மாதங்களுக்கு முன், வெளிநாட்டில் வசிக்கும் மற்றொரு மகன் வீட்டுக்கு சென்றனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து 8 கிலோ வெள்ளி பொருட்கள், 5 சவரனை கொள்ளையடித்து சென்றனர்.

கடையில் ₹50 ஆயிரம் திருட்டு: அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ் (36) என்பவரின் மளிகை கடை பூட்டை உடைத்து, கல்லாவில் வைத்திருந்த ₹50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கார் திருடிய 2 பேர் கைது: முகப்பேர் மேற்கு, ஏரி திட்ட பகுதியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (41) என்பவரின் காரை திருடிய, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (25), கருணாகரன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வடசென்னையில் விற்பனை செய்து வந்த, தண்டையார்பேட்டை துர்கா தேவி நகர் 5வது தெருவை சேர்ந்த தியாகு (எ) அப்பாஸ் (23) என்பவரை போலீசார் கைது செய்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>