எம்.ஜி.ஆர் நகரில் வாலிபர் வெட்டிக்கொலை

சென்னை: எம்.ஜி.ஆர் நகரில் முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை எம்.ஜி.ஆர் நகர், டாக்டர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (35). இவருக்கும் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தீபக் என்ற சீமகாளை (26) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த தீபக், எம்.ஜி.ஆர் நகருக்கு சென்று காளிமுத்துவை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினார்.

இதில், காளிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காளிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த தீபக்கை நேற்று கைது செய்தனர்.

Related Stories:

>