பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணி புறக்கணிப்பு: வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில தலைவர் கு.குமரேசன், பொது செயலாளர் எம்.பி.முருகையன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: மே மாதம் 11ம் தேதி முதல்வரால் அறிவித்தப்படி கொரோனாவால்  இறந்த வருவாய் துறையை சேர்ந்க குடும்பத்துக்கு நிவாரணமாக ₹25 லட்சம் வழங்கி அரசாணை வெளியிட வேண்டும், சட்டமன்ற தேர்தல் நடத்தியதற்கான செலவின நிதி ஒதுக்கீடு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தேர்தல் மதிப்பூதியம் வழங்க வேண்டும். நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை பாதுகாத்து அரசாணை வெளியிட வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் பட்டியல்களை உடன் வெளியிட வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30ம் தேதி அனைத்து மாவட்டம் மற்றும் வட்ட தலைநகரங்களில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை வலியுறுத்தி வருகிற நவம்பர் 13, 14, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களை தமிழத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுலர்கள் அனைவரும் முழுமையாக புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: