3 மாதங்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி; கடையில் தேநீர் அருந்தினார்!!

மாமல்லபுரம்:முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, இசிஆர் சாலையில் இன்று 2-வது முறையாக சைக்கிளில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது மக்கள் முதல்வருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மு.க.ஸ்டாலின், முதல்வராவதற்கு முன்பு ஒவ்வொரு வாரமும் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்த பயணத்தின்போது மக்களை சந்திப்பது வழக்கம். இந்நிலையில் முதல்வரான பிறகு கடந்த ஜூலை 4ம் தேதி முதன்முறையாக இசிஆர் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து 2வது முறையாக , இன்று அதிகாலை முட்டுக்காடு பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார்.

கோவளம், செம்மஞ்சேரி, திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி, கிருஷ்ணன் காரணை, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு, பட்டிப்புலம், சாலவான்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரத்தை அடைந்தார். வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை பார்த்து மு.க.ஸ்டாலின் ஆர்வமுடன் கையசைத்தபடி சென்றார். பதிலுக்கு பொதுமக்களும் உற்சாகத்துடன் கையசைத்து வரவேற்றனர். அப்போது மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடையில் முதல்வர் தேநீர் அருந்தினார். மேலும் அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் சற்று நேரம் ஓய்வெடுத்தார். இதையடுத்து மீண்டும் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

Related Stories:

>